ETV Bharat / state

கிசான் திட்டம் முறைகேடு: மதுரையில் ரூ.2.15 கோடி மீட்பு! - kisan Plan Corruption

மதுரை: கிசான் திட்டம் முறைகேடு விவகாரத்தில் தகுதியற்றவர்களிடம் இருந்து 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

collector-ordered-in-kissan-fraud-case-in-madurai

author img

By

Published : Oct 13, 2020, 7:16 PM IST

தமிழ்நாடு முழுவதும் கிசான் திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 77 பேர் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் சிறப்பு குழு ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை சுமார் 6 ஆயிரத்து 8 பேரிடம் இருந்து 2 கோடியே 15 லட்சம் ரூபாய் திரும்பப் பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தகுதியற்றவர்கள் கண்டறியப்பட்டு அவரிடம் இருந்து காவல் துறை உதவியுடன் பணத்தை மீட்க மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி வினய் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்துபோலீஸ் பாதுகாப்புடன் பணத்தை மீட்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

அதுமட்டுமன்றி வேளாண்மை இணை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே இரண்டு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் கிராமத்தினர் வங்கிக்கு வர தயக்கம் காட்டுவதால் கிராமம் முழுவதும் வங்கி அலுவலர்கள் முகாமிட்டு பணத்தை வசூல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கே.கே.நகர் திமுக பிரமுகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.