ETV Bharat / state

'பட்டாசு ஆலை தொழிலை முறைப்படுத்த என்ன நடவடிக்கை' தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்க செய்ய உத்தரவு - தமிழ்நாடு அரசு

மதுரை: பட்டாசு ஆலை தொழிலை முறைப்படுத்த என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்க செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Chennai HC madurai bench
Chennai HC madurai bench
author img

By

Published : Feb 25, 2021, 10:01 PM IST

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு ஆலையில் கடந்த பிப்.12ஆம் தேதி நடைபெற்ற விபத்தில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் நூறு சதவிகித காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

அங்குப் பணியாற்றியவர்களில் சிலர் இந்த வெடி மருந்துகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பான அடிப்படை பயிற்சி அற்றவர்கள் எனவும், இதன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்தது எனவும் தெரியவருகிறது. உரிமத்தை ஒருவரது பெயரில் பெற்றுக் கொண்டு, அதன் கீழ் பல கிளைகளாக பட்டாசு ஆலைகள் இயங்குவது அதிகரித்து வருகின்றன.

முறையான, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் பணியாற்றியது இந்த விபத்தில் அதிகம்பேர் உயிரிழந்ததற்கு காரணமாக அமைந்துள்ளது. அரசு அலுவலர்கள் விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதில்லை. அரசு அலுவலர்களின் இந்த பொறுப்பற்ற, மெத்தன போக்கு காரணமாகவே, இது போன்ற விபத்துக்கள் நிகழ்ந்து ஏராளமானோர் உயிரிழக்கின்றனர்.

ஆகவே விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு ஆலையில் பிப்ரவரி 12 நடைபெற்ற விபத்து தொடர்பாக விசாரிக்க தனி விசாரணை ஆணையத்தை அமைக்கவும், இது போன்ற விபத்துகள் வரும் காலங்களில் தவிர்க்கப்படும் வகையில் விதிமீறுவோரின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு பட்டாசு ஆலை தொழிலை முறைப்படுத்த என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.