மதுரை: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் ராஜபாளையம் பிரதான சாலையில் 600 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகேவுள்ள இடத்தில் முத்தாலம்மன் கோயிலுக்கு சொந்தமான சப்பரம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சப்பரத்தில் இன்று (டிசம்பர் 16) திடீரென தீப்பற்றியது.
கோயில் நிர்வாகத்தினர் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே தீயை அணைக்கும் பணி தொடங்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து காவல் நிலைய ஆய்வாளர் துரைப்பாண்டி தலைமையில் சார்பு ஆய்வாளர் சாந்தகுமார் உள்ளிட்ட காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சென்னை அனகாபுத்தூரில் தீ விபத்து - மின் கசிவால் பற்றி எரிந்த வீடு