மதுரை: மாநகர் அழகர் கோயில் சாலையில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. கோ.புதூர் செல்லும் இந்த முக்கிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம், பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தங்கச் செயினை பறித்துச் சென்றார்.
எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மற்றும் அவரது தோழி தடுமாறி கீழே விழுந்தனர்.
இதுகுறித்த சிசிடிவி காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 18 பெண்கள்.. பாலியல் வன்புணர்வு கொலை.. சைக்கோ உமேஷ் ரெட்டி தூக்கு உறுதி!