ETV Bharat / state

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் எய்ட்ஸ்: பாதிக்கப்பட்ட பெண் நிவாரணம் வழங்கக் கோரி வழக்கு

author img

By

Published : Feb 16, 2022, 6:27 PM IST

மருத்துவமனைகளின் அலட்சியத்தால் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கும், தனது குழந்தைக்கும் உரிய மருத்துவ உதவி செய்யவும், நிவாரணம் வழங்கக் கோரியும் இளம்பெண் தொடுத்த வழக்கில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் பதில் மனு தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கும் தனது குழந்தைக்கும் உரிய மருத்துவ உதவி நிவாரணம் வழங்க வேண்டும்

மதுரை: வாடிப்பட்டியைச் சேர்ந்த எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல்செய்துள்ளார்.

அந்த மனுவில், "நான் கர்ப்பம் ஆனது முதல் அனைத்துப் பரிசோதனைகளும் பாலமேடு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மேற்கொண்டுவந்தேன். பாலமேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பரிந்துரையின்பேரில் ரிசர்வ்லையன் கண்ணா மருத்துவமனையில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று ரத்தம் ஏற்றும்போது சிறிது நேரத்திலேயே எனக்கு உடல் நடுக்கம் ஏற்படவும் ரத்தம் ஏற்றுதல் நிறுத்தப்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை

அதன்பின் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் ரத்தம் ஏற்றப்பட்டது. 2020ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று சுகப்பிரசவம் மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. பிறகு சில மாதங்களில் எனக்கு எடை குறைய ஆரம்பித்தது. தொடர் காய்ச்சல் இருந்தது. அதன்பின் மருத்துவமனையில் பரிசோதித்தபோது ஹெச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்தது.

உரிய மருத்துவ உதவி வழங்க வேண்டும்
உரிய மருத்துவ உதவி வழங்க வேண்டும்

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை பரிசோதனையில் எனக்கும், என் குழந்தைக்கும் ஹெச்ஐவி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனது கணவருக்கு ஹெச்ஐவி இல்லை எனக் கூறினார்கள். இதனால் பெரிதும் மனம் உளைச்சல் ஏற்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்தச் சம்பவம் குறித்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர், அலுவலர்களுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மருத்துவமனைகளின் அலட்சியத்தால் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கும், என் குழந்தைக்கும் உரிய மருத்துவ உதவி செய்து நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் எய்ட்ஸ் தொற்று உள்ள ரத்தத்தை ஏற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு வந்தபின் 160 கோயில்கள் இடிப்பு - ராதாரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.