ETV Bharat / state

பெரிய படங்கள் திரையிடப்பட்டால் மட்டுமே பிழைக்க முடியும் - தியேட்டர்காரர்கள் வேதனை!

பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளுக்கு வந்தால் மட்டும்தான் மக்கள் கூட்டம் அலைமோதும். அதுவரை திரையரங்குகள் வருமானம் பார்ப்பது இயலாத காரியம் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்களும், ஊழியர்களும். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு இதோ...

தியேட்டர் திறந்தாச்சி...  ஆனா மக்கள காணோம்...

author img

By

Published : Jan 3, 2021, 11:38 AM IST

Updated : Jan 3, 2021, 2:18 PM IST

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களான கோயில்கள், உணவு விடுதிகள், சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டன. இந்நிலையில், திரையரங்குகளில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் ஊதியமின்றி பெரும் இன்னலுக்கு ஆளாயினர்.

திரையரங்குகள் மீண்டும் திறப்பு:

தமிழ்நாட்டில் கரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாய் குறையத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசானது, கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. உரிய வழிகாட்டு நெறிமுறைகளோடு நவம்பர் 10 முதல் திரையரங்குகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திரையரங்குகளும் திறக்கப்பட்டன.

கடந்தாண்டு கடைசியில் இயக்குநர் செல்வராகவனின் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரண்டு படைப்புகளும் சென்னை, மதுரை என 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ ரிலீஸாக வெளியானது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இது ஒட்டுமொத்தமான வரவேற்பா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

சென்னையில் உள்ள காசி திரையரங்கு உள்ளிட்டவற்றில் தான் மக்களின் வருகை அதிகமாயிருக்கிறதே தவிர, மதுரை போன்ற பகுதியில் திரையரங்குகள் காற்று வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

மதுரை திரையரங்குகளின் கள நிலவரம்:

மதுரையில் 35க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் பெரிய திரையரங்குகள் உள்ளன. இங்குள்ள ஒவ்வொரு திரையரங்கின் மொத்த இருக்கையில் நான்கில் ஒரு பங்குகூட நிரம்புவதில்லை. திரை அரங்கிற்கு வர மக்களும் போதிய ஆர்வம் காட்டாததால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிகின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

அரசு அறிவுறுத்துதலின் படியே கிருமி நாசினி, தகுந்த இடைவெளி, முகக் கவசம் என அனைத்தையும் பின்பற்றி மக்களை திரையரங்குக்குள் அனுமதிக்கிறோம். ஆனாலும் மக்களின் வருகையானது குறைந்தே காணப்படுகிறது” என்று வேதனை தெரிவித்தார், மதுரை சம்மட்டிபுரத்திலுள்ள மிட்லாண்ட் திரையரங்க மேலாளர் துரைப்பாண்டியன்.

திரையரங்க திறந்தாச்சி...ஆனா மக்கள காணோ..

இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு சங்க நிர்வாகி கே.வி.ஆர்.கஜேந்திரன் தொலைபேசி வாயிலாக நம்மிடம் பேசியபோது, ”தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக நாங்கள் வைத்த கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டு திரையரங்குகளைத் திறக்க உத்தரவிட்டது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு திரைத்துறையும், தமிழ்நாடு அரசும் வழிவகை செய்ய வேண்டும். ஓடிடி, அமேசான் போன்ற இணையதளங்களின் வாயிலாக படங்கள் பார்ப்பதை பொதுமக்கள் விரும்பவில்லை. நேரம் ஒதுக்கி திரையரங்கிற்கு வருகை தந்து, ஒளி-ஒலி தொழில்நுட்ப ரசனையுடன் கண்டுகளிக்கவே விரும்புகின்றனர். தற்போதைய சூழலில், சிறிய நடிகர்களின் படங்களைக் காண்பதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை” என்றார்.

திரையரங்க பார்வையாளர் அரசரடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திகேயன், ”கரோனாவைத் தடுக்க போதுமான ஏற்பாடுகளை திரையரங்குகள் செய்து வைத்திருந்தாலும், மக்களின் வருகை குறைவதற்கு இணையதளங்களும் முக்கியக் காரணம்தான். எந்தப் படமாக இருந்தாலும் அவற்றை திரையரங்குகளில்தான் வெளியிட வேண்டும் என அரசு அறிவிப்புச் செய்ய வேண்டும்'’ என்றார்.

வீட்டிலிருந்தே இலவசமாகப் படங்களைக் காணமுடியும் என்றால், திரையரங்குகளின் தேவை மக்களிடையே குறைந்துபோகும். ஒளி-ஒலி தொழில்நுட்பம் பெரு வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலத்தில், அதுபோன்ற அனுபவங்களை வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தர முடியாது. ஆகையால் திரையரங்குகளுக்கு வந்தே ஆக வேண்டும். இந்நிலையில் பொதுமக்களின் வருகை குறைவாக உள்ளதைக் கவனத்தில்கொண்டு தமிழ்நாடு அரசும், திரைத்துறையும் பெரிய நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் வெளியிட ஆவண செய்ய வேண்டும். அப்போதுதான் திரையரங்குகளில் மீண்டும் பழைய சுறுசுறுப்பைக் காண முடியும்.

இதையும் படிங்க: ’அடுத்தவர்களிடம் அறிவுரை கேட்பதை நிறுத்துங்கள்’ - சிம்பு

Last Updated : Jan 3, 2021, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.