மதுரை, புதூர் சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்த ரவி. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், நேற்று முன்தினம் உறவினரைப் பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, தன் வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ளி சிசிடிவி கண்காணிப்புக் கேமரா காட்சிகளில் திரட்டி ஆய்வு செய்துவருகின்றனர்.