ETV Bharat / state

செல்போனில் விளையாடியதால் கண்டித்த தாய்: சிறுவன் தற்கொலை - மதுரை அண்மைச் செய்திகள்

செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் விளையாட்டு கண்டிப்பு - சிறுவன் உயிரிழப்பு!

author img

By

Published : Sep 29, 2021, 7:37 PM IST

மதுரை: மதுரை அருகே உள்ள விளாங்குடியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - முத்துமாரி தம்பதியர். இவர்களது மகன் பிரான்ஸிஸ் எபனேசர் (17). இவர் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம் வகுப்புப் படித்துவந்தார். இந்நிலையில் எபனேசர் தனது வீட்டிலுள்ள செல்போனில் அடிக்கடி ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

சம்பவத்தன்றும் (செப். 27) அவர் ஆன்லைன் விளையாட்டு விளையாட, அதனை அவரது தாயார் முத்துமாரி கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த எபனேசர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்போது இது குறித்து கூடல்புதூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.