ETV Bharat / state

பாஜக மாநிலச்செயலாளர் நடு இரவில் கைது; காரணம் இது தான்! - chennai news

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளரான எஸ்.ஜி.சூர்யாவை சென்னையில் வைத்து மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

எம்.பி சு.வெங்கடேசனுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக பாஜக மாநில செயலாளர் நடு இரவில் கைது; அண்ணாமலை கண்டனம்!!

author img

By

Published : Jun 17, 2023, 10:45 AM IST

Updated : Jun 17, 2023, 6:24 PM IST

எம்.பி சு.வெங்கடேசனுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக பாஜக மாநில செயலாளர் நடு இரவில் கைது; அண்ணாமலை கண்டனம்!!

சென்னை: சென்னை தியாகராயநகரில் இருந்த எஸ்.ஜி.சூரயாவை மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் (17.06.2023) நள்ளிரவில் கைது செய்தனர். அவர் மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக விசாரித்த போது மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக சமூகவலைத்தள பதிவு காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன். இவர் மலம் கலந்த நீரில் தூய்மைப் பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்யச் சொன்னதாகவும், அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு அந்த தொழிலாளி இறந்துவிட்டதாகவும் எஸ்.ஜி.சூர்யா குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை கண்டு கொள்ளாமல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என்றும் பாஜக மாநிலச் செயலாளராக இருக்கும் எஸ்.ஜி. சூர்யா என்பவர் தன்னுடைய ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் பதிவிட்டு வந்துள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 12ஆம் தேதி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் "மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே கிடையாது. விஸ்வநாத் என்ற கவுன்சிலரும் கிடையாது. அப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெறாதபோது வதந்தியைக் கிளப்பி, சமூக பதற்றத்தை ஏற்படுத்தி சாதி ரீதியான மோதலைத் தூண்டுவதோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் அவதூறு செய்திகளை பாஜக நிர்வாகியான எஸ்.ஜி.சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது. இதன் பேரிலேயே எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது குறித்து தகவல் அறிந்த பாஜகவினர் சென்னை எழும்பூரில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்.ஜி.சூர்யா கைது குறித்து முறையான தகவல் தெரிவிக்கவில்லை எனவும், தமிழக பாஜகவை பழிவாங்கும் நோக்கில் திமுக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி அருகே உள்ள ஈ.வெ.ரா. சாலையில் அமர்ந்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரபப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பாஜகவினர் கலைந்து சென்றனர். இந்நிலையில் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில், ’’தமிழக பாஜக மாநிலச் செயலாளர் திரு. எஸ்.ஜி.சூர்யா அவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள். விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க் கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது.

அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது. கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

  • அறிக்கை

    கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் பறிபோன தூய்மை பணியாளர் உயிர் - கள்ள மெளனம் காக்கும் புரச்சீ போராளி மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!

    பிரிவினைவாதம் பேசும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது, மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே! @SuVe4Madurai @MaVeWriter pic.twitter.com/tAUtSMZDYI

    — SG Suryah (@SuryahSG) June 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை முதல்வருக்கு வைத்த செக் மேட் - திருமாவளவன்

Last Updated : Jun 17, 2023, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.