ETV Bharat / state

4 மாநிலங்களில் தமிழர்களுக்கு ஆளுநர் பதவி - தமிழிசை கூறிய காரணம்!

தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு உண்மையான அன்பு இருப்பதால் தான் 4 மாநில ஆளுநர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 22, 2023, 10:32 PM IST

தமிழர்கள் மீதுள்ள அக்கறையால் தான் 4 மாநில ஆளுநர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - ஆளுநர் தமிழிசை

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மீனாட்சியை வணங்குவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. அண்மையில் குடியரசு தலைவர் மீனாட்சி அம்மனை வழிபட்டு சென்றார். நாட்டின் முதல் குடிமகனாக ஒரு பெண் இருக்கும் பெருமையை பிரதமர் ஏற்படுத்தி தந்துள்ளார்.

ஆளுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் பட்டறையாக ராஜ்பவன் உள்ளது. தமிழ்நாடு மக்கள் மீது எங்களுக்கு அன்பு இல்லை என்று எம்பி வெங்கடேசன் கூறியுள்ளார். தமிழ்நாடு மக்கள் மீது உண்மையில் அதிக அன்பு கொண்டுள்ளோம். அப்படி அன்பு செலுத்திய காரணத்தால் தான் இந்தியாவில் 4 மாநில ஆளுநர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எம்.பி.வெங்கடேசன் எங்களைப் பற்றி தவறாக திரித்து எழுதி கொண்டிருக்கிறார். ஆளுநர்களுக்கு யார் அங்கீகாரம் கொடுத்தாலும் நாங்கள் கொடுக்க மாட்டோம் என்பது போல பேசும் எம்.பி.வெங்கடேசனுக்கு தான் உண்மையில் தமிழ்நாடு மக்கள் மீது அக்கறையில்லை என்றார்.

மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உலக தரத்தில் கட்டப்பட வேண்டிய ஒன்று. ஏற்கனவே, 50 மாணவர்கள் படிக்கும் நிலையில், கூடுதலாக மாணவர்கள் படிக்கும் படி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். தமிழகத்திற்கு எய்ம்ஸ் வர வேண்டும் என இப்போதுள்ள ஆட்சியாளர்கள் தான் நினைத்தார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் நினைக்கவில்லை. ஹைதராபாத்தில் கூட எய்ம்ஸ் கட்டி முடிக்கும் வரை மாணவர்கள் தற்காலிகமாக வேறு கல்லூரியில் தான் படித்தார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னை, மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. ஆயுஷ்மான் திட்டம் போன்று யாரும் சிந்திக்காத திட்டங்களை பரதமர் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார். எய்ம்ஸ் விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என சொல்லும் கருத்து தவறானது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "திருவிழாக்களின்போது மதுபான கடைகளை மூடுவதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது" - ஐகோர்ட் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.