ETV Bharat / state

குழந்தை விற்பனை வழக்கு - காப்பக ஒருங்கிணைப்பாளருக்கு பிணை

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணிக்கு நிபந்தனை பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

காப்பக ஒருங்கிணைப்பாளருக்கு ஜாமீன்
காப்பக ஒருங்கிணைப்பாளருக்கு ஜாமீன்
author img

By

Published : Sep 6, 2021, 7:29 PM IST

மதுரை: ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டுவந்தது. இந்தக் காப்பகத்திலிருந்த இரண்டு குழந்தைகள் கரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறி வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தொடர்ந்து, காப்பகத்தின் இயக்குநர் சிவகுமார், அவரது உதவியாளர் மதர்ஷா, ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்டோரை தல்லாகுளம் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் கலைவாணி பிணை கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்செய்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, காவல் நிலையத்தில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் கலைவாணிக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கைத்தறி - துணிநூல் துறை மானியக் கோரிக்கையில் 25 புதிய அறிவிப்புகள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.