மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணி புரிந்து வருபவர் அமுதவள்ளி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்தச் சூழலில் பெண் உதவி ஆய்வாளர் அமுதவள்ளியுடன் பணியாற்றும் காவல்துறையினர் வளைகாப்பு நிகழ்ச்சியை காவல் நிலையத்திலேயே நடத்த திட்டமிட்டனர்.

அதன்படி மதிச்சியம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் இணைந்து அமுதவள்ளிக்கு வளைகாப்பு நடத்தி கொண்டாடி மகிழ்ந்தனர். பெண் உதவி ஆய்வாளர் அமுதவள்ளிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை அவர் பணிபுரியும் மதிச்சியம் காவல்நிலையத்தில் காவலர்கள் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
மதிச்சியம் காவல் ஆய்வாளர் செல்வி, காவல் துணை ஆணையர் லில்லி கிரேஸ் உள்ளிட்டோர் தலைமையில் அமுதவள்ளிக்கு வளைகாப்பு நிகழ்வு நடந்தது.
இதையும் படிங்க: திருத்தணிகாச்சலம் குண்டர் சட்டம் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!