மதுரை ஆத்திக்குளம் பகுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக விபசார தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஹேமமாலாவுக்கு தகவல் வந்ததையடுத்து நேரில் சென்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி தேவசேரி பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் பூசமலை என்பவர் இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பெண்கள் உட்பட எட்டு பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்