ETV Bharat / state

அனைத்து சிறைகளிலும் பார்வையாளர் குழு அமைக்க வேண்டும் -  நீதிமன்றம் - சிறைவாசிகள் உரிமை கையேடு

அலுவல் சாரா பார்வையாளரின் பதவிக்காலம் முடியும் போது, உரிய நேரத்தில் அந்த நியமனங்களை மேற்கொள்ளும் வகையில் அதற்கென குழுவை அமைக்க வேண்டும் என்றும், ஆய்வு செய்து, ஆலோசனை மற்றும் பயிற்சிகள் வழங்கிடும் வகையில் அனைத்து சிறைகளிலும் பார்வையாளர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து சிறைகளிலும் பார்வையாளர் குழுவை அமைக்க வேண்டும் - உயர் நீதிமன்ற கிளை

author img

By

Published : Jan 4, 2023, 6:30 AM IST

Updated : Jan 4, 2023, 10:13 AM IST

மதுரை: தமிழ்நாடு சிறைகளில் அலுவல் சாரா பார்வையாளர்களாக உரிய பயிற்சி பெற்றவர்களை நியமிக்கக் கோரி மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிபேன் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, "2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் மட்டும் 33 பேர் உயிரிழந்திருப்பது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

சிறைகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுமையாக கண்காணிக்கப்படுவதாகவும், அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்படுவதால் பின்னாளில் அவற்றை பரிசோதிக்கலாம் எனவும், சிறைவாசிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க அனுமதிப்பதுடன், வாரத்திற்கு ஒரு முறையும், மாதத்திற்கு 45 நிமிடமும் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுகின்றனர்.

ரூ.2.01 கோடியில் 9 மத்திய சிறைகள், 3 சிறப்பு சிறைகளில் 54 தொலைபேசிகள் உள்ளன. இது சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அலுவல் சாரா பார்வையாளரின் பதவிக்காலம் முடியும்போது, உரிய நேரத்தில் அந்த நியமனங்களை மேற்கொள்ளும் வகையில் அதற்கென குழுவை அமைக்க வேண்டும்.

ஆய்வு செய்து, ஆலோசனை மற்றும் பயிற்சிகள் வழங்கிடும் வகையில், அனைத்து சிறைகளிலும் பார்வையாளர் குழுவை அமைக்க வேண்டும். அலுவல் சாரா பார்வையாளர் கூட்ட தீர்மானம், அரசுக்கான பரிந்துரைகளை மாவட்ட மற்றும் மாநில சிறை வெப்சைட்டில் வெளியிட வேண்டும்.

மாதிரி சிறை விதிகள் மற்றும் ஐநாவின் மண்டேலா விதிகளின்படி, சிறை விதிகள் 1894 மற்றும் தமிழ்நாடு சிறை விதிகள் 1983இல் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சிறைகளிலும் இட நெருக்கடியை குறைக்க வேண்டும். சிறைவாசிகளின் உரிமை கையேட்டை அனைத்து சிறைவாசிகளுக்கும் வழங்குவதுடன், சிறைத்துறை வெப்சைட்டில் வெளியிட வேண்டும்.

குழுவின் பரிந்துரை மற்றும் அதன் மீதான நடவடிக்கை குறித்த ஆண்டறிக்கையை சிறைத்துறை ஐஜி தரப்பில் தயாரித்து வெப்சைட்டில் வெளியிட வேண்டும். மருத்துவ வசதி, குடிநீர், ஆரோக்கியமான உணவு ஆகியவை எந்நேரமும் அனைவருக்கும் கிடைக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

சிறை நிர்வாகத்தை மேம்படுத்திட சிறைப் பணியில் உள்ளவர்களுக்கு தேவையான புத்தாக்க பயிற்சி வகுப்புகளை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். குறைதீர் பிரிவை செயல்படுத்திடும் வகையில் புகார் பெட்டிகள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும். பார்வையாளர் முறை சிறப்பாக செயல்படும் வகையில் மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல்படி அனைத்து தரப்பினரையும் கொண்டு ஆண்டு மாநாட்டை அரசு தரப்பில் நடத்த வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: திரையரங்கில் வெளி உணவு கொண்டு செல்ல தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Jan 4, 2023, 10:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.