ETV Bharat / state

7ஆம் தேதி ஒருமனதாக முதலமைச்சர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா!

அதிமுகவில் நல்லவராகவும், வல்லவராகவும் இருப்பவரே முதலமைச்சர் வேட்பாளராக வருவார், வெற்றியும் பெறுவார் என மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா
அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா
author img

By

Published : Oct 3, 2020, 7:07 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தொடங்கிவைத்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர், சோளங்குருணி பகுதியில் 50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராஜன் செல்லப்பா, கிராம சபை கூட்டம் என்பது அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஒருமனதாக தேவையான கருத்துகளை சொல்லி தீர்மானம் நிறைவேற்றுவது. ஆனால் திமுகவினர் தங்களது சுயலாபத்திற்காக அரசு உத்தரவை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியுள்ளனர்.

அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

இந்தக் கூட்டத்தில் மக்கள் யாரும் ஆர்வமுடன் கலந்து கொள்ளவில்லை அவர்களாகவே ஆட்களை வரவழைத்து கிராம சபை கூட்டம் நடத்தியுள்ளது வேடிக்கையாக உள்ளது.

தலைமைக்கழகம் அதிமுக எம்எல்ஏக்கள் யாரையும் அழைக்கவில்லை வரும் 7ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து ஒருமித்த ஆதரவோடு முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பார்கள்.

நாங்கள் அனைவரும் 7ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஒருமனதாக முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுப்போம். திமுகவில் கருணாநிதியை வல்லவர் என்று சொல்வார்கள், ஆனால் திமுகவினரே கருணாநிதி வல்லவர்தான் ஆனால் நல்லவர் இல்லை எனச் சொல்வார்கள். ஆனால் அதிமுகவில் அப்படி அல்ல நல்லவராகவும், வல்லவராகவும் இருப்பவரே முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் அவரே வருகின்ற 2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அவரது தலைமையில் ஆட்சியைப் பிடிப்போம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.