ETV Bharat / state

மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை அறிவிப்பை வரவேற்கிறோம்... ஆனால்..?

மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் என்ற அறிவிப்பு தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்ற ஐயம் எழுந்துள்ளதாக வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ்.ரத்தினவேல் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
author img

By

Published : Jan 14, 2023, 9:15 AM IST

மதுரை விமான நிலையம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ்.ரத்தினவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மதுரை விமான நிலையம் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்ற மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரின் அறிவிப்பு நிரந்தரமாக இருக்குமா? இரவு ஷிப்ட் செயல்பட்டும் கூட விமான நிறுவனங்கள் மதுரை விமான நிலையத்திற்கு விமான சேவை அளிக்க முன் வரவில்லை" என்ற காரணத்தைச் சொல்லி ரத்து செய்து விடுவார்கள்.

முன்பு ஒருமுறை இப்படித்தான் செய்தார்கள். இரவு ஷிப்டுக்காக அனுப்பப்பட்ட CISF பாதுகாவலர்களை இக்காரணத்தை சொல்லித் திரும்ப அழைத்துக் கொண்டுவிட்டார்கள். பிற நாடுகளுடன் நம் நாடு செய்து கொண்டுள்ள "இரண்டு நாடுகளுக்கிடையேயான விமான நிலைய சேவை ஒப்பந்தத்தில்" (Bi-lateral Airport Service Agreement - BASA) மதுரை விமான நிலையத்தைச் சேர்த்தால் தான் அந்த நாடுகளிலுள்ள விமான நிறுவனங்கள் மதுரைக்கு நேரடியாக விமான சேவை அளிக்க முடியும். துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய ஐக்கிய அரபு நாடுகளிலும் மற்றும் மலேசியா, சிங்கப்பூர். தோஹா நாடுகளிலும் உள்ள விமானம் நிறுவனங்கள் மதுரைக்கு நேரடிச் சேவையைத் துவக்க தயாராக இருக்கின்றன. ஆனால் நம் நாடு அதற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது.

எஸ்.ரத்தினவேல்
எஸ்.ரத்தினவேல்

நம்மாலும் முடியவில்லை. வெளிநாட்டு விமான நிறுவனங்களையும் அனுமதிக்க மாட்டோம். இது தான் மதுரை விமான நிலையத்திற்கு கடைப்பிடிக்கப்படும் விமான கொள்கையாகும். இந்த நிலைமை இப்படியே நீடித்தால், மேற்கொண்டு விமானங்கள் வர வாய்ப்பிருக்காது. இதனால் இரவு ஷிஃப்ட் ரத்து செய்யப்பட்டுவிடும். எனவே முதலில் மேற்கண்ட நாடுகளுடனான விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை மத்திய விமான போக்குவரத்துத் துறை சேர்க்க வேண்டும்.

அத்துடன் மதுரை விமான நிலையத்தை இன்னமும் சுங்க விமான நிலையமாகத்தான் வைத்திருக்கிறார்கள். அனைத்துலக விமான நிலையமாக நிலை உயர்த்தப்படவில்லை. இந்தியாவில் உள்ள 10 சுங்க விமான நிலையங்களில் அதிகளவில் பன்னாட்டுப் பயணிகளைக் கையாளும் மதுரை விமான நிலையத்தை. உலகச் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலா இடங்கள் இருந்தும் கூட அனைத்துலக விமான நிலையம் என அறிவிக்க மறுக்கிறார்கள்.

நம் நாட்டு விமான நிலையக் கொள்கையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மதுரை விமான நிலையத்தின் முன்னேற்றம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது. இதனால் தென் தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சி தேக்க நிலையிலேயே இருக்கிறது. காய்கறி, பழங்கள். மலர் மற்றும் வேளாண் உணவுப் பொருட்களுக்கு மேற்கண்ட நாடுகளில் நல்ல கிராக்கி இருந்தும் நம்மால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. விளையும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து மாநில அரசும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் உரிய நடவடிக்கை எடுத்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தாய்லாந்து டூ சென்னை: அபாயகரமான உயிரினங்கள் கடத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.