விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(57). இவர் விருதுநகர் அதிமுக முன்னாள் யூனியன் சேர்மனாக இருந்துள்ளார். பாவாலி 12ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வந்த அவர், திருமங்கலம் அருகே நல்லமநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் ரமேஷ் பேவர் பிளாக் என்ற கம்பெனி நடத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 6) மாலை கம்பெனிக்கு வந்த அவர், அங்கிருந்த மோட்டாரில் ஏற்பட்ட பழதை நீக்க முயற்சித்தார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு