மதுரை : அ.தி.மு.க. மாநாடு மதுரை மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நேற்றிரவே மதுரை வந்து சேர்ந்தனர். கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் விரைந்தனர்.
-
#Live வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு | #AIADMK_எழுச்சி மாநாடு https://t.co/qQhwwoiufT
— AIADMK (@AIADMKOfficial) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Live வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு | #AIADMK_எழுச்சி மாநாடு https://t.co/qQhwwoiufT
— AIADMK (@AIADMKOfficial) August 20, 2023#Live வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு | #AIADMK_எழுச்சி மாநாடு https://t.co/qQhwwoiufT
— AIADMK (@AIADMKOfficial) August 20, 2023
அ.தி.மு.க., மாநாடு பந்தலில் இன்று காலை 8:45 மணிக்கு 51 அடி உயர கொடிக்கம்பத்தில் காஞ்சிபுரத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மெகா கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஜெ.பேரவை மாநில செயலாளர் உதயகுமார் ஏற்பாடு செய்த தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
பின்னர் மாநாடு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பந்தலை திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் மாநாட்டிற்காக நேற்று (ஆகஸ்ட். 20) மாலை மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்களுக்கு மூன்று வேளையும் சைவ உணவு வழங்கப்படுகிறது. இசையமைப்பாளர் தேவா கச்சேரி, ராஜலட்சுமி, செந்திலின் கிராமிய இன்னிசை, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மாலை 5:00 மணியளவில் மாநாடு பந்தலுக்கு வரும் பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகளை கவுரவித்து பொற்கிழி வழங்கி, எழுச்சி உரையாற்றுகிறார். பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கப்பலுார் டோல்கேட் அருகே மதுரை நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார், கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா ஆகியோர் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், முனுசாமி, கடம்பூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, காமராஜ் உள்ளிட்டோர், ஜெ., பேரவையினர், மகளிர் அணியினர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
மாநாட்டிற்காக வட சென்னை, தென் சென்னை மாவட்ட செயலாளர்கள் சத்யா, ராஜேஷ் தலைமையில் ஆயிரத்து 300 தொண்டர்கள் சிறப்பு ரயில் மூலம் மதுரை வந்தனர். ரயில் பெட்டிகள் முழுவதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதேபோல் மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து தொண்டர்கள் திரண்டு வந்தனர்.
மாநாடு திடலில் பொதுச்செயலாளர் பழனிசாமி கொடியேற்றும் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் துாவ சென்னை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆர் காலத்திலேயே அதிமுக கொடியில் தாமரை சின்னம்! மதுரை மாநாடு அதிமுகவுக்கு திருப்புமுனை தருமா?