மதுரை: நடிகை மீரா மிதுன் அண்மையில் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில் பட்டியலின மக்களோடு ஒப்பிட்டு திரைப்பட இயக்குநர்களையும், குறிப்பிட்ட சாதியினரை குற்றவாளிகள், திருடுபவர்கள் என்றும் மிக மோசமாக கொச்சைப்படுத்திப் பேசினார்.
இந்தியா முழுவதும் வசிக்கக்கூடிய கோடிக்கணக்கான பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் விதமாகவும், அந்த மக்களை மன உளைச்சலாக்கும் விதமாகவும் அவரது பேச்சு இக்காணொலியில் அமைந்திருந்தது.
கைதுசெய்யக்கோரி புகார்
இந்நிலையில், நடிகை மீரா மிதுன், அவரது காதலர் ஷாம் அபிஷேக் இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் இனி இதுபோல சாதிய வன்பேச்சுக்கள் நடைபெறா வண்ணம் விழிப்புணர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதுடன் நடிகை மீரா மிதுன், ஷாம் அபிசேக் இருவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறும் அந்தப் புகார் மனுவில் அவர் கோரியுள்ளார்.
இதையும் படிங்க: 'ஆக்ரோச பார்வையில் சன்னிலியோன்: 'ஷிரோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்'