மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிலும் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து நடிகர் ரஞ்சித் கீழக்குயில்குடி விலக்கில் மே 6ஆம் தேதி தேர்தல் பரப்புரை செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறேன். மக்கள் தண்ணீருக்கு மிகவும் துன்பப்படுகிறார்கள். ஒரு சொட்டுத் தண்ணீருக்காக அவர்கள் படும்பாடு வேதனையாக உள்ளது. வீட்டில் தண்ணீர் வரவில்லையென்றால், வீட்டுக்காரரிடம் நியாயம் கேட்கும் இவர்கள் வாக்குக் கேட்டு வருகின்ற ஆட்சியாளர்களை எதிர்க்க மறுக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெறுவது மோடியின் கேடி ஆட்சி - நடிகர் ரஞ்சித் தாக்கு சசிகலாவின் காலில் விழுந்து பதவியைப் பெற்ற இவர்கள், அந்த நன்றியை மறந்து வலம் வருகிறார்கள். எளிமையான நபர்களையும் பதவிக்கு கொண்டு வந்தவர் சசிகலா. அவருக்கே துரோகம் செய்தவர்கள்தான் இன்றைய ஆட்சியாளர்கள். எம்ஜிஆர் கண்ட சின்னமான இரட்டை இலையை வடநாட்டுக்காரர்களிடம் அடகு வைத்துவிட்டார்கள். திமுக, அதிமுகவுடன் உறவு வைப்பது பெற்ற தாயோடு உறவு வைப்பதற்கு சமம் என்று சொன்ன ராமதாஸ், கடைசியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது எவ்வளவு கேவலம்? இவர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்றுத் தர வேண்டும்" என்றார்.