ETV Bharat / state

பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர் தவறி விழுந்ததால் உயிரிழப்பு - பிரிட்டோ பள்ளி

மதுரையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர் தவறி விழுந்ததால் உயிரிழப்பு

author img

By

Published : Aug 29, 2022, 7:48 PM IST

மதுரை: பழைய விளாங்குடி பகுதியைச்சேர்ந்த தனசேகரன்- உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன், ரோகித் என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான பிரிட்டோ பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டு வந்தபோது அரசுப்பேருந்தில் கூட்டமாக இருந்ததால் விளாங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசுப்பேருந்தில் கூட்டமாக ஏறினர். படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் வந்தனர். அப்போது குரு தியேட்டர் அருகே பேருந்து வந்தபோது பிரபாகரன் தவறி கீழே விழுந்ததில், பேருந்தின் டயர், மாணவர் மீது ஏறி இறங்கியதில் பள்ளி மாணவர் படுகாயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த மாணவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே மாணவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:முருகப்பா குழுமத்தின் 3 சக்கர மின் வாகனங்கள்... முதலமைச்சர் தொடங்கி வைப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.