ETV Bharat / state

மதுரை சித்திரைத் திருவிழா - டாஸ்மாக் கடைகளை தேவை ஏற்பட்டால் மூட உத்தரவு! - மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை 6 நாட்கள் மூடக்கோரிய மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து, தேவை ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 28, 2023, 6:21 PM IST

மதுரை: மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை சித்திரைத் திருவிழா தொடர்ச்சியாக 15 நாட்கள் கொண்டாடப்படும். குறிப்பாக மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை மற்றும் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஆகியவை முக்கிய விழாக்களாக கொண்டாடப்படும். இந்த விழாக்களில் சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வர்.

கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிகழ்ந்த குற்றங்களின் விகிதம் அதிகரித்து உள்ளது. ஆகவே, அதனைத் தடுக்கும் விதமாக மதுரையில் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடினால் குற்றச்சம்பவங்கள் குறைய வாய்ப்பாக அமையும். ஆகவே, மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஏப்ரல் 30ஆம் லிருந்து மே 5ஆம் தேதி வரை 6 நாட்கள் மூட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, மதுரை மாவட்ட ஆட்சியர் மனுதாரரின் மனுவை பரிசீலித்து, தேவை ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: திருச்சியில் கொடிகட்டி பறக்கும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை.. காவல்துறை நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.