மதுரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெறும். உலகப் புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூர் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கா் நிலம் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடமாக அதிகாரிகளால் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அரங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் அரங்கம் அமைப்பதற்காக விரிவாக திட்ட அறிக்கை தயாரித்து சமர்பிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் வருமாண்டில் தொடங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: அடங்காத காளைகளின் அலங்காநல்லூர்... வாடிவாசல் மாற்றமா...?