ETV Bharat / state

மீனாட்சி கோயிலில் 6ஆம் நாள் நவராத்திரி விழா!

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவில் ஆறாம் நாளான இன்று வேல்வளை செண்டு தொடுத்தல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.

Meenakshi temple
Meenakshi temple
author img

By

Published : Oct 22, 2020, 8:40 PM IST

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அந்த வகையில் நவராத்திரி விழா அக்டோபர் 17 முதல் 25ஆம் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி மீனாட்சியம்மனின் அலங்காரத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் மாலை 4 மணி முதல் 5. 30 மணி வரை, மாலை 6. 45 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் மூலஸ்தான அம்மனை தரிசிக்கலாம். மாலை 5. 30 மணி முதல் 6. 45 மணி வரை மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், பூஜைகள் நடக்கின்றன. பக்தர்கள் கொலு மண்டபத்தில் உற்சவர் அம்மனை தரிசிக்கலாம்.

அக்.17ஆம் தேதி நவராத்திரி முதல் நாள் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 18ஆம் தேதி வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்யும் அலங்காரத்திலும், 19ஆம் தேதி சாமி தன்னைத்தானே பூஜித்தல் அலங்காரத்திலும், 20ஆம் தேதி விறகு விற்றல் அலங்காரத்திலும், நேற்று கடம்பவன வாசினி அலங்காரத்திலும் காட்சியளித்தார்.

நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று (அக்.22ல்) வேல்வளை செண்டு தொடுத்தல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் காட்சி தந்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்தனர்.

இதையும் படிங்க: கரோனா காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொண்ட சிங்கப்பெண்களின் கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.