ETV Bharat / state

மதுரையில் 6 காவல் ஆய்வாளர்கள் டிஎஸ்பி., ஆக பணி நியமனம்! - டிஎஸ்பி ப்ரோமோஷன்

மதுரை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல் ஆய்வாளர்களாகப் பணியாற்றிய ஆறு பேர் டிஎஸ்பி ஆக பொறுப்பேற்கவுள்ளனர்.

police
police
author img

By

Published : Sep 2, 2020, 4:59 PM IST

சென்னையில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய சம்பத்குமார் போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி ஆக மதுரையில் பொறுப்பேற்கிறார். நீலகிரி மாவட்டம் நடுவட்டம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய அக்பர் கான் மதுரையில் வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி ஆணையராக பொறுப்பேற்கிறார்.

அதே போல், சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடியாக பணியாற்றிய ராஜன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி துணை கோட்ட டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார். தென்காசி குருவிகுளம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், மதுரை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார்.

மதுரை மாவட்ட மத்திய குற்றத்தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் காவல் ஆய்வாளராக பணியாற்றும் வேல்முருகன் அதே துறையில் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வரும் ரகுபதி ராஜா, மதுரை மாவட்டம் மேலூர் துணை கோட்ட டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 14 டிஎஸ்பி-களுக்கு பதவி உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.