ETV Bharat / state

வைகை எக்பிரஸ் ரயிலுக்கு 44ஆவது பிறந்தநாள்... கொண்டாடி மகிழ்ந்த மதுரையன்ஸ்! - vaigai express

மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 44ஆவது பிறந்தநாளை மதுரை ரயில் நிலைய சந்திப்பில் இன்று (ஆக.15) மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வைகை எக்பிரஸ்
வைகை எக்பிரஸ்
author img

By

Published : Aug 15, 2021, 2:27 PM IST

மதுரையிலிருந்து நாள்தோறும் காலை 6.45 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், பகல் நேரத்தில் சென்னைக்குப் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் சென்னையிலிருந்து மதியம் 1.20க்கு இந்த ரயில் புறப்படுகிறது. 1977இல் அறிமுகப்படுத்தும்போது மதுரை மண்டலத்தின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வைகையே.

நாள்தோறும் இந்த ரயிலில் சென்னை-மதுரை, மதுரை-சென்னை மார்க்கமாக ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் பயணம் செய்கின்றனர். ஒரு வழிப் பயண தூரம் என்று பார்த்தால் 497 கி.மீ. ஆண்டிற்கு மூன்று இலட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது. அப்படியானால் இந்த 44 ஆண்டுகளில் தோராயமாக ஒரு கோடியே 70 இலட்சம் கி.மீ. தூரம் பயணம் செய்து இந்த ரயில் சாதனை படைத்துள்ளது. (பூமியிலிருந்து நிலவின் தூரம் 4 இலட்சம் கி.மீ.!)

வைகை எக்பிரஸ்
வைகை எக்பிரஸ் பிறந்த நாளைக் கொண்டாடிய மக்கள்

தொடக்க காலத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் வைகை எக்ஸ்பிரஸ், ரயில்வேயின் பயண அட்டவணையில் இடம்பெறவில்லை. 1980க்குப் பிறகே நாள்தோறும் வைகையின் பயண அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக மீட்டர்கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது வைகை எக்ஸ்பிரஸிதான்.

வைகை எக்பிரஸ்
வைகை எக்ஸ்பிரஸ்

இந்தியாவிலேயே... ஏன்... ஆசியாவிலேயே கூட மீட்டர் கேஜில் மிக வேகமாகச் சென்ற முதல் ரயில் வைகை எக்ஸ்பிரஸ் தான். ஏறக்குறைய நாள்தோறும் பயணிகளால் நிரம்பி வழியும் ரயில்களில் வைகைக்கு முக்கியமான இடமுண்டு.

கடந்த சில ஆண்டுகளாக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழும் ரயில் ஆர்வலர் அருண் பாண்டியன் இது குறித்து கூறுகையில், ”பகல் நேரம் சென்னைக்கு பயணிக்கும் ரயில்களில் வைகை எக்ஸ்பிரஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். காலையில் புறப்பட்டுச் சென்றால் சென்னையில் சில வேலைகளை முடித்து விட்டு இரவு அங்கிருந்து திரும்பி மறுநாள் மதுரை வந்து விடலாம்.

வைகை எக்பிரஸ்
வைகை எக்பிரஸ் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்த மக்கள்

இந்தியாவின் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் வைகைக்கு மிக முக்கியமான இடம் உண்டு. மைசூர் எக்ஸ்பிரஸ் உடன் ஒப்பிடும்போது வைகை மிகவும் ஃபாஸ்ட். மைசூர் எக்ஸ்பிரஸும் இதே வேகத்தில் தான் பயணம் செய்கிறது. இது எங்கும் நிற்பதில்லை.

ஆனால் வைகை எக்ஸ்பிரஸ் 11 நிலையங்களில் நின்று செல்கிறது. மைசூர் எக்ஸ்பிரஸுக்கு 18 பெட்டிகள் உள்ளன. ஆனால் வைகைக்கு 24 பெட்டிகள் உள்ளன. வைகையின் வேகம் என்பது 7 மணி 20 நிமிடங்கள்.

வெறும் 130 ரூபாய் கட்டணத்தில் சென்னை வந்து சேருகிறோம் என்றால், ரயில்வே நமக்குத் தருகிற சலுகையை பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ள பயணிகள் அனைவரும் முன்வர வேண்டும். ரயில் பெட்டிகளையும் சரி, ரயில் நிலையங்களையும் சரி, மிகத் தூய்மையாக வைத்துக் கொள்வது பொதுமக்களாகிய நமது கடமையும்கூட...” என்றார்.

இதையும் படிங்க: காந்தியின் நினைவுகளை உலகறியச் செய்து வரும் மங்கம்மாள் மாளிகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.