ETV Bharat / state

மேல்முறையீடு செய்து மகனைக் கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வாங்கித்தந்த தந்தை!

author img

By

Published : Feb 12, 2020, 7:52 PM IST

மதுரை: 2008ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

2008 Madurai murder case
2008 Madurai murder case

மதுரை யானைக்கல் பகுதியில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தவர் வல்லரசு. 2008ஆம் ஆண்டு யானைக்கல் பகுதியில் வல்லரசு நின்றுகொண்டிருந்தபோது அவருக்கும் பிரபு, சுரேஷ், வீரா என்ற வீராசெல்வம், பாண்டி, ராஜா, பெரியபாண்டி ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் ஆறு பேரும் சேர்ந்து வல்லரசுவைக் கொலை செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், ஆறு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வல்லரசுவின் தந்தை ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜா, புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க...அனைத்து டயர்களும் தமிழ்நாட்டில்தான்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.