ETV Bharat / state

மதுரையில் 20 ரயில் பெட்டிகள் கரோனா சிகிச்சை சிறப்பு வார்டாக மாற்றம்! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: கரோனா வைரஸ் தொற்றின் தீவிரப் பரவலையடுத்து மதுரை ரயில் நிலையத்தில் 20 ரயில் பெட்டிகள் தற்காலிக மருத்துவமனையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

madurai railway
madurai railway
author img

By

Published : Apr 4, 2020, 5:46 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, ரயில்வே துறை ரயில் பெட்டிகளைத் தற்காலிக மருத்துவமனையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அண்மையில் ரயில் பெட்டிகள் கரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

குஜராத்தில் 70 ரயில் பெட்டிகள் வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனிமைப்படுத்துதல் வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

அதபோன்று தற்போது மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்களின் சில பெட்டிகள் தற்காலிக மருத்துவமனைக்கான வசதிகளோடு தயாராகிவருகின்றன. 22.5 மீட்டர் நீளம் கொண்ட படுக்கை வசதி பெட்டிகள், முன்பதிவில்லா பெட்டிகள் என தரம் பிரிக்கப்பட்டு ஏறக்குறைய 20 பெட்டிகள் தற்காலிக கரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டு கொண்ட மருத்துவமனைக்கான வசதிகளோடு தயாராகிவருகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் 16 நோயாளிகள் தங்கும் வகையில் திரைச்சீலைகள், கொசு வலைகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டு வருகின்றன.

அவ்வாறு தயாராகும் பெட்டியில் சுமார் 300 நோயாளிகள் வரை தங்கி சிகிச்சை பெறலாம். தேவைப்படும் பட்சத்தில் பெட்டிகளின் எண்ணிக்கை கூட்டப்படும். இந்தப் பெட்டிகள் அனைத்திலும் இரண்டு இந்திய கழிவறைகள், மேற்கத்திய கழிவறை மற்றும் குளியலறை வசதி கொண்டதாக இருக்கும். மதுரை கோட்டத்தில் உள்ள திண்டுக்கல், காரைக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் பெட்டிகளிலும் இது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரோனா சிகிச்சைக்கென தயார் நிலையில் இருக்கும் ரயில் பெட்டிகள்.

மேலும், இங்கு தயாரிக்கப்படும் பெட்டிகள் அனைத்தும் எங்கு தேவையோ அங்கு உடனடியாக கொண்டு செல்லப்படும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் தேவை நிறைவடைந்தப் பிறகு மீண்டும் அவற்றை ரயில் பெட்டியாக இணைத்துக் கொள்ளலாம் என்று தென்னக ரயில்வே மதுரை கோட்ட பொறியாளர் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: குஜராத்தில் 70 ரயில் பெட்டிகள் கோவிட்-19 வார்டுகளாக மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.