மதுரை: கோயம்புத்தூர் மண்டல அலுவலகமான சிண்டிகேட் வங்கி கடந்த 2010-ஆம் ஆண்டு அளித்த புகாரின் பேரில் வங்கி பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. திண்டுக்கல் மெயின் கிளை சிண்டிகேட் வங்கியை ஏமாற்ற, அரசு ஊழியர்களுடன் தனி நபர்கள் சதி செய்ததாகப் புகார் எழுந்தது.
தகுதியில்லாத கடனாளிகளுக்கு ரூ.155.79 லட்சம் வீட்டுக் கடன்களை பொது ஊழியர் அனுமதித்து விடுவிக்கிறார். கடன் கணக்குகள் ரூ.162.72 லட்சத்திற்கு இல்லாத சொத்துக்கு வாங்கிய கடன் என்ற அடிப்படையில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடந்த 03-05-2012 அன்று சிபிஐ சார்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சிமெண்ட் நிறுவனத்தில் மாமூல் கேட்டு ரகளை செய்த கல்லக்குடி திமுக ஆதரவாளர்.. காவல் நிலையத்தில் புகார்.. வைரலாகும் சிசிடிவி!
இதனையடுத்து இம்மோசடி குறித்த வழக்கு விசாரணை, மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் எனக் கண்டறிந்து அவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, சிபிஐ வழக்குகளுக்கான கூடுதல் மாவட்ட நீதிபதி, சிண்டிகேட் வங்கி மேலாளர் குணசீலனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் ரூபாய் 75 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய பால் ஜான்சன், ஏ.குமரேசன் ஆகிய தனி நபர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதத்துடன் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் மேலும் ஒரு பாதிரியார் கைது.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?
அதேபோல் ஜேசுவின் ஃபெபிக்கு ரூபாய் 30 ஆயிரம் அபராதத்துடன் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஆர்.மகாலிங்கம், சி.ஆறுமுகன், ராஜா தாமஸ், ஆர்.முரளி, ஆர்.திருப்பதி, ஜி.தங்கராஜன், ஆர்.வடமலை, ஏ.ஜேசுராஜ், ஷருண் ரஷித், பி.தேரடிமுத்து, எஸ்.சுந்தரேசன் ஆகிய அனைவருக்கும் ரூபாய் 60 ஆயிரம் அபராதத்துடன் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
வங்கி பணத்தை மோசடி செய்த சிண்டிகேட் வங்கியின் மேலாளர் உள்ளிட்ட 15 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த கடுங்காவல் தண்டனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: பைக் திருட்டில் இது புது ரூட்டு.. 15 பைக்களுடன் சிக்கிய பலே திடுடன்!