கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள தேவிசெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் கிரிஷ் (22), மஞ்சுநாத் (26). கிரிஷ் ஓசூர் பகுதியில் கட்டட வேலை பார்த்து வருகிறார். அதேபோல மஞ்சுநாத் ஓசூரிலுள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்றிரவு (அக்.07) ஓசூரில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்குமிடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், கிரிஷ் மஞ்சுநாத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மஞ்சுநாத் வீட்டிலிருந்த கத்தியை எடுத்துவந்து கிரிஷை குத்தியுள்ளார்.
இதில் அவருக்கு இடுப்பு பகுதியில் கத்திக்குத்து விழுந்துள்ளது. பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாகலூர் காவல் துறையினர், மஞ்சுநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர்களுக்கு கத்தி குத்து: ஒருவர் உயிரிழப்பு