கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முன்னணி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவர் செல்வகுமார் இன்று கிருஷ்ணகிரி நகர்ப்பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான சுதேசி காலத்தில் செயல்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில் திட்டம் நிறைவேற்றி கொடுப்பேன்.
நான் வெற்றி பெற்றால் 365 நாட்களுக்குள் ரயில் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன். இல்லாவிடில் எனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன்" எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.