கிருஷ்ணகிரி மாவட்டம் காளிங்கவாரம் கிராமத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக சூளகிரி காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், காளிங்கவாரம் மற்றும் மாரண்டப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காளிங்கவாரத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பனை செய்த சண்முகம் மற்றும் சக்திகான் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் இவர்களிடமிருந்து 5 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சாரய ஊறல்களையும் காவல் துறையினர் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க: 'அவசர சிகிச்சைக்காக மட்டுமே வெளி மாநில நோயாளிகளை அனுமதிக்க வேண்டும்'