ETV Bharat / state

சினிமா ஸ்டன்ட் காட்சி போல கண நேரத்தில் நிகழ்ந்த விபத்து

கிருஷ்ணகிரி: அரசுப் பேருந்தின் சக்கரங்கள் கழன்று விழுந்து ஏற்பட்ட கோர விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jun 10, 2019, 11:53 AM IST

விபத்து

இன்று காலை 4.30 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்தப் பேருந்து சூளகிரி அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென்று பேருந்தின் முன்புற சக்கரங்கள் இரண்டும் கழன்று விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சிக்கிய பயணிகள் பேருந்திலிருந்து அவசரமாக இறங்கி சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த புதிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பயணிகள் சாலையைக் கடப்பதைப் பார்த்து பேருந்தை திடீர் பிரேக் போட்டு உடனடியாக நிறுத்தினார். இதனால் பின்னால் வந்துகொண்டிருந்த லாரி புதிய அரசுப் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.

சினிமா ஸ்டண்ட் காட்சி போல கன நேரத்தில் நிகழ்ந்த விபத்து

இதனால், கண நேரத்தில் அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்ந்தன. இதில், சாலையைக் கடக்க முயன்ற இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சூளகிரி காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ஆம்புலன்ஸை அழைத்து விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சூளகிரி காவல் துறையினர் இந்தக் கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோர விபத்து 3 பேர் பலி .15 பேர் படுகாயம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று காலை 4.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது . இந்தப் பேருந்து சூளகிரி அருகே சூளகிரி பக்கமாக வந்த போது திடீரென்று பஸ்ஸின் முன்புற இரண்டு டயர்கள் கழன்று விபத்துக்குள்ளானது . இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி சாலையைக் கடக்க முயன்றனர் . அந்த நேரம் பின்னால் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி புதிய அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது . சாலையை பயணிகள் கிடப்பதைப் பார்த்த அந்தப் பேருந்தின் டிரைவர் பஸ்சை தீடீர் பிரேக் போட்டு உடனடியாக நிறுத்தினார் . அந்த நேரம் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று புதிய அரசு பேருந்தின் மீது பயங்கரமாக பின்புறமாக மோதியது . மேலும் முன்னால் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து  மீதும் மோதி கவிழ்ந்தது . இதில் புதிய அரசு பேருந்தும் லாரியும் சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடந்தன .இந்த கோர விபத்தில் சாலையைக் கடக்க முயன்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் . 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் . இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் . அதேபோல் ஆம்புலன்ஸ் வாகனங்களும் அங்கு கொண்டுவரப்பட்டன .பலியான மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் .அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . காயமடைந்த 15 பேரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் . இந்த விபத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது .விபத்துக்குள்ளான மூன்று வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் . இதற்காக ராட்சத கிரேன்கள் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Visual on ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.