ETV Bharat / state

'புதிய தொழில் கத்துக்கோங்க' - கல்லூரி மாணவருக்கு கைகொடுக்கும் கற்றாழை ஜூஸ் தொழில்

நாட்டில் வேலைவாய்ப்பின்மை ஏற்கனவே அதிகரித்து வந்த சூழலில், கரோனா தொற்றால் பலரது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், கற்றாழை ஜூஸ் தயாரிக்கும் புதிய தொழிலைக் கையில் எடுத்து, அதனைத் திறம்பட நடத்தி லாபம் பார்த்து வருகிறார், இளங்கலை கல்லூரி மாணவர் அருணாஷ். இந்த இளம் தொழில் முனைவோர் குறித்த செய்தித்தொகுப்பைக் காணலாம்.

student aloevera juice entrepreneur in krishnagiri

author img

By

Published : Jun 16, 2020, 12:18 PM IST

Updated : Jun 16, 2020, 2:12 PM IST

’குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு’ என்பார்கள். இங்கு முதலில் உள்ள குமரி பெண்ணைக் குறிப்பது ஆகும். இரண்டாவது குமரி ’கற்றாழை’. ஆனால் பெண்களுக்கு மட்டுமின்றி உடல் வெப்பத்தைத் தணிக்க, இன்று உலகின் அனைத்து பாலினத்தவருக்கும் கற்றாழை என்னும் வரப்பிரசாதம் தேவைப்படுகிறது. இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு ’கற்றாழை ஜூஸ்’ தொழில் செய்து வெற்றி பெறத் துடிக்கும் கல்லூரி மாணவர் அருணாஷ் குறித்த செய்தித் தொகுப்புதான் இது.

கல்லூரி மாணவருக்கு கைகொடுக்கும் கற்றாழை ஜூஸ் தொழில்

கற்றாழை பெரும்பாலும் மலைப் பகுதிகளில்தான் விளைகிறது. கற்றாழை அறுவடை அவ்வளவு எளிதல்ல. கத்தியைக் கொண்டு கணுவின் தொடக்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது கற்றாழை. அதன் பின்னர், பக்கவாட்டிலும், நுனியிலும், அடிப் பாகத்திலும் வெட்டப்பட்டு ஒரு சாக்கில் சேமித்து கொண்டு வரப்படுகிறது. பின்னர் அதன் கசப்பு நீங்க, பலமுறை தண்ணீரைக் கொண்டு கழுவப்படுகிறது. அதன்பின்பு, முன்பக்கத் தோல் பிரித்தெடுக்கப்படுகிறது. தொடர்ந்து, பின்பக்கத் தோலின் மேலே உள்ள ஜெல்லி போன்ற பகுதி, பலமுறை கழுவப்பட்டு தனிப் பாத்திரத்தில் சேமிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, இரவு ஊறவைக்கப்பட்ட தயிரானது காலையில் தாளிப்பு போட்டு கடையப்பட்டு மோராக மாற்றப்படுகிறது. பின்பு கற்றாழை ஜெல்லி சேர்த்து அரைக்கப்பட்டு மோரும், காற்றாழை ஜூசும் தனித்தனி பாத்திரங்களில் சேமிக்கப்படுகின்றன.

இதன்பிறகு, மூன்று பங்கு கற்றாழை ஜூஸுடன் ஒரு பங்கு மோர் ஊற்றப்பட்டு, சிறிது உப்பு, மிளகுப் பொடி சேர்த்து, காலை நேர நடையால் சோர்ந்து களைப்புடன் வரும் நுகர்வோருக்கு 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களில் ஒரு சில மாணவர்கள்தான் சுயசார்பு பொருளாதாரத்துடன் வாழ ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் படிக்கும்போதே சுய தொழிலில் ஈடுபட்டு பலருக்கும் உத்வேகம் அளிக்கிறார் மாணவர் அருணாஷ்.

இவர் தற்போது இளங்கலை தாவரவியல் படித்துக் கொண்டிருக்கிறார். தாவரவியல் படித்ததாலோ என்னவோ மூலிகைகளின் மகத்துவம் அறிந்து வைத்துள்ளார் அருணாஷ். அந்த வகையில் கற்றாழை ஜூஸ் தயாரித்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். அருணாஷுக்கு இந்தத் தொழிலில் உதவியாக, அவரது 45 வயது தாயாரும் மகனுடன் களத்தில் நிற்கின்றனர்.

அலோசின் (Aloesin), அலோ-எமோடின் (Aloe-emodin), அமினோ அமிலங்கள் ஆகிய தாவர வேதிப் பொருள்கள் கற்றாழையில் உள்ளன. கற்றாழையில் உள்ள கொலாஜென் (Collagen), எலாஸ்டின் (Elastin) போன்றவை புரதங்களின் உற்பத்தியை அதிகரித்து, உடலில் உண்டாகும் வயோதிக மாற்றத்தைத் தள்ளிப் போடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வீக்கமுறுக்கி செய்கையுடைய குளுக்கோசில் க்ரோமோன் (Glucosyl chromone) எனும் பொருள் கற்றாழையிலிருந்து சமீபத்தில் பிரித்தெடுக்கப்பட்டது. உடம்பில் வலி உண்டாக்கும் பிராடிகினின் (Bradykinin)இன் செயல்பாட்டைத் தடுத்து, உடனடி வலி நிவாரணியாக இது செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த சிறு தொழில் மூலம் காலை ஆறு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை தொழில் செய்து 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக அருணாஷ் தெரிவிக்கிறார். மேலும் புதிய தொழில் முனைவோரை, அதுவும் இயற்கை சார்ந்த தொழில் முனைவோரை தமிழ்ச் சமூகம் எப்போதும் வரவேற்கக் காத்திருக்கிறது என வெற்றிக் குறி காட்டுகிறார் அருணாஷ். இவர் பல புதிய தொழில் முனைவோர்களுக்கு சிறு கட்டணத்துடன் பயிற்சியும் அளித்து வருகிறார்.

இது குறித்து பேசிய அருணாஷ், ”கற்றாழை சம்பந்தமான இயற்கை முறையில் தயாரிக்கக் கூடிய பானங்கள், பல்வேறு வகையான மதிப்புக் கூட்டுப் பொருள்கள் சந்தைகளில் உள்ளன. இருப்பினும் நாங்கள் காற்றாழையை நேரடியாக உற்பத்தி செய்து இயற்கை முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இனி வரும் காலங்களில் இந்தியப் பொருளாதாரத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப இளம் தொழில் முனைவோர் தங்களை மாற்றிக்கொண்டு இவ்வாறு பல மதிப்பு கூட்டுப் பொருள்கள் சார்ந்த தொழில்களை சிறிய முதலீட்டுடன் தொடங்கலாம்.

இதனை அரசாங்கமும் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் சென்றால் இளம் தலைமுறையினர் வெகுவாகப் பயன்பெறுவர். அரசு இது தொடர்பாக மானிய உதவிகளை வழங்கினால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... கோடையில் வாடிய பனை வியாபாரிகள்...

Last Updated : Jun 16, 2020, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.