கரோனா பாதிப்பால் நாடு முழுவதும் வரும் மே மாதம் 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இரண்டு பேக்கரிகள், இரண்டு டைல்ஸ் கடைகள், ஒரு சமையல் அடுப்பு விற்பனையகம் உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வந்தன.
மேலும், தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல், அதிக கூட்டத்தை கூட்டி பொருள்களை விற்று வருவதாகவும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து காவல் துறையினரின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை அலுவலர்கள், அங்கு செயல்பட்டுவந்த கடைகளை நோட்டமிட்டனர். அனைத்து கடைகளிலும் தனிநபர் இடைவெளியின்றி வியாபரம் செய்துவந்ததை உறுதி செய்த அலுவலர்கள், கடைகளின் உரிமையாளர்களை எச்சரித்து, கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் அரசு உத்தரவை மீறிய 2 கடைகளுக்கு சீல்