ETV Bharat / state

வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி; இளைஞரை சுட்டு பிடித்த போலீசார்! - துப்பாக்கிச்சூடு

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே தமிழ்நாடு கர்நாடக எல்லைப் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thief
author img

By

Published : Jun 4, 2019, 7:27 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே அத்திப்பள்ளியில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் டிவிஎஸ் சாலையில் வாகன ஓட்டிகளிடம் இளைஞர் வழிப்பறி செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற காவலர்கள் வழிபறியில் ஈடுபட்ட இளைஞரை பிடிக்க முயற்சித்தனர். காவலர்களை தாக்கி இளைஞர் தப்பி ஒட முயன்றார். அவரை சரணடையுமாறு காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதையும் மீறி ஒடியதால், இளைஞரின் கால் பகுதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

சம்பவ இடம் மற்றும் மருத்துவமனையில் ஆய்வு செய்யும் போலீசார்
இதில், கால் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதையடுத்து கீழே விழந்து இளைஞரை பிடித்து விசாரித்தபோது, பெங்களூரு எடியூர் பகுதியை சேர்ந்த சேசாங்க் (23) என்று தெரிய வந்தது. அவரை மீட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதித்தனர். இளைஞரின் தாக்குதலில் காயமடைந்த காவலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தமிழ்நாடு கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் போலீஸ்சை தாக்கி தப்பி ஒடிய வழிப்பறி கொள்ளையன் மீது போலீஸ் தூப்பாக்கி சூடு.

ஒசூர் அருகே அத்திப்பள்ளியில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில்   ஒசூர் TVS சாலையில் ஒரு இளைஞன் வழிப்பறி செய்வதாக அத்திப்பள்ளியில் போலீஸ் க்கு தகவல் அவ்வழியே சென்றவர்கள் தகவல் கொடுத்துள்ளனர் உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அந்த வழிபறி கொள்ளையனை பிடிக்க முயற்ச்சி செய்த போது போலீசை தாக்கி தப்பி ஒடி முயன்றான் அப்போது போலீஸ் எச்சரிக்கை மிறி ஒட முயன்ற போது போலீஸ்சார் கொள்ளையன் மீது தூப்பாக்கி சூடு நடத்தியதில் அவன் கால் பகுதியில் தூப்பாக்கி குண்டு பாய்ந்தது அவனை பிடித்து விசாரித்த போது அவன் பெங்களுர் எடியூர் பகுதியை சேர்ந்த சேசாங்க் - 23 என்று தெரிய வந்தது அவனை மீட்டு பெங்களுர் மருத்துவமனையில் சிகிழ்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் மேலும் கொள்ளையன் தாக்கிய போலீஸ் அதிகாரியும் சிகிழ்சை பெற்று வருகிறார் இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

Visual on ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.