ETV Bharat / state

மதுபோதையில் வாக்குச்சீட்டை கிழித்து சட்டை பாக்கெட்டில் வைத்த ஆசாமி!

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மது போதையில் ஓட்டுச்சீட்டை கிழித்து சட்டைப் பாக்கெட்டில் வைத்த தொழிலாளியிடமிருந்து வாக்குச்சீட்டினை கைப்பற்றிய அலுவலர்கள் அதனை வாக்குப்பெட்டிக்குள் போட்டனர்.

election
election
author img

By

Published : Dec 28, 2019, 3:28 PM IST

காவேரிப்பட்டணம் அருகே மதுபோதையில் வாக்குச் செலுத்தவந்த ஆசாமி ஒருவர் வாக்குச்சீட்டை கிழித்து தனது சட்டைப்பாக்கெட்டில் வைத்துகொண்டு செல்ல முயன்றார். அப்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து வாக்குச் சீட்டை பிடுங்கி வாக்குப்பெட்டிக்குள் போட்டனர்.

இந்த ருசிகர சம்பவம் பற்றிய முழு விபரம் பின்வருமாறு,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் நேற்று (டிச.27) உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் மலையாண்டஅள்ளி அரசுப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில், நன்பகல் நேரத்தில் மது போதையில், வாக்களிப்பதற்காக வந்த ராஜா என்பவர், ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கச் சென்றார்.

பின்னர் அவர் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கான வாக்குகளை பதிவு செய்தார். அதன் பிறகு ஓட்டுச் சீட்டுக்களை வாக்குப்பெட்டிக்குள் போடாமல் தனது சட்டைப்பைக்குள் வைத்துகொண்டு செல்ல முயன்றார். அதனை கவனித்த தேர்தல் அலுவலர்கள் அவரிடமிருந்த வாக்குச்சீட்டை பறிமுதல் செய்து வாக்குப்பெட்டிக்குள் போட்டனர்.

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போதையில் இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: வாக்குப் பெட்டியை திருடிச்சென்று முட்புதரில் போட்டுவிட்டு உறங்கிய நபர் கைது!

Intro:காவேரிப்பட்டணம் அருகே ருசிகரம்.
மது போதையில் ஓட்டுச்சீட்டை கிழித்து சட்டைப்பாக்கெட்டில் வைத்த தொழிலாளி.
வாக்குச்சாவடி அலுவலர்கள் மடக்கி பிடித்து வாக்குப்பெட்டிக்குள் போட்டனர்Body:காவேரிப்பட்டணம் அருகே ருசிகரம்.
மது போதையில் ஓட்டுச்சீட்டை கிழித்து சட்டைப்பாக்கெட்டில் வைத்த தொழிலாளி.
வாக்குச்சாவடி அலுவலர்கள் மடக்கி பிடித்து வாக்குப்பெட்டிக்குள் போட்டனர்.

காவேரிப்பட்டணம் அருகே மது போதையில் ஓட்டுப்போட வந்த ஆசாமி ஒருவர்
ஓட்டுச்சீட்டை கிழித்து தனது சட்டைப்பாக்கெட்டில் வைத்து செல்ல
முயன்றார்.அவரை வாக்குச்சாவடி அலுவலர்கள் மடக்கிப் பிடித்து ஓட்டுச்சீட்டை
பிடுங்கி வாக்குப்பெட்டிக்குள் போட்டனர்.
இந்த ருசிகர சம்பவம் பற்றிய விபரம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு நேற்று உள்ளாட்சி
தேர்தல் நடந்தது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் மலையாண்டஅள்ளி அரசு பள்ளி
வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த
நிலையில் நேற்று மதியம் வாக்களிப்பதற்காக ராஜா என்பவர் வந்தார்.
அப்போது மது போதையில் இருந்த அவர் ஆவணங்களை காட்டி ஓட்டு போட சென்றார்.
பின்னர் அவர் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர்,
வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஓட்டுக்களை போட்டார். அதன்
பிறகு ஓட்டுச்சீட்டுக்களை வாக்குப்பெட்டிக்குள் போடாமல் அதை கிழித்து
தனது சட்டைப்பைக்குள் வைத்து செல்ல முயன்றார்.

ஓட்டுச்சீட்டை பிடுங்கினார்கள்.

இதை வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும், பூத் ஏஜெண்டுகள் பார்த்தனர்.
உடனடியாக அவர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அவரிடம் விசாரித்தபோது
அவர் போதையில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த
ஓட்டுச்சீட்டுக்களை வாங்கி ஓட்டுப்பெட்டிக்குள் போட்டு அவரை
அனுப்பினார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம்
பரபரப்பாக காணப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.