ETV Bharat / state

விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய்கள் பதிப்பது தற்காலிகமாக நிறுத்திவைப்பு! - சூளகிரியில் பாரத் பெட்ரோலிய எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணி நிறுத்திவைப்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சூளகிரி சுற்றுவட்டார விளைநிலங்களில் பாரத் பெட்ரோலிய எண்ணெய்க் குழாய்கள் பதிப்பதை தற்காலிகமாக கைவிடுவதாக அலுவலர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

bpcl
bpcl
author img

By

Published : Sep 16, 2020, 12:29 PM IST

கோயம்புத்தூர் முதல் பெங்களூரு வரை, தமிழ்நாட்டின் 6 மாவட்ட விளைநிலங்களில் பாரத் பெட்ரோலிய எண்ணெய்க் குழாய்கள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டன.

ஓசூர் அடுத்த சூளகிரி சுற்றுவட்டார விளைநிலங்களிலும் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சூளகிரி பகுதி விவசாயிகள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விளைநிலங்களில் பாரத் பெட்ரோலிய எண்ணெய்க் குழாய்களை பதிப்பதை கைவிட வலியுறுத்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டில்லிபாபு தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று(செப்.15) நடந்த காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகள், திமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வந்த நிலையில், ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் தலைமையிலான வருவாய் உள்ளிட்ட அலுவலர்கள் போராட்டக் குழுவினரிடம் சமாதானக் கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தின் முடிவில் குழாய்களை விளைநிலங்களில் பதிப்பதைவிட தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பதிக்கலாம் என்கிற விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறிய அலுவலர்கள்; தமிழ்நாடு அரசின் மறு உத்தரவு வரும் வரை பாரத் பெட்ரோலிய எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முடிவு எடுத்துள்ளனர்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணை தலைவரும் அரூர் முன்னாள் எம்எல்ஏவுமான டில்லிபாபு கூறுகையில், சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையிலேயே விளைநிலங்களில் குழாய்கள் பதிப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டுமென்றும், அலுவலர்களின் தற்காலிக முடிவிற்கு கட்டுப்பட்டு செல்வதாகவும் கூறினார்.

இந்த சமாதானக் கூட்டத்தில் அமமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்டச் செயலாளர்கள், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், திமுக ஒன்றியச் செயலாளர் உள்ளிட்டோருடன் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றிருந்தனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.