கர்நாடகாவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே இருக்கும் மேலுமலைக்கு ஒரு குழு சுற்றுலா வந்தது. அந்த குழுவில் பெண் ஒருவரும் இருந்தார். சுற்றுலா வந்தவர்கள் அந்த பெண்ணுடன் காட்டுப்பகுதியில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, அவர்கள் அப்பெண்ணை ஏமாற்றி அங்கிருக்கும் குட்டையில் குளிக்க வைத்து நீருக்குள் அழுத்தி கொலை செய்துவிட்டதாக தெரிகிறது.
இப்பகுதியில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடந்து வந்தன. ஆனால். கடந்த ஒரு வருடமாக பெரிய அளவுக்கு குற்றங்கள் நடைபெறவில்லை என்று கூறிய சூளகிரி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் இந்த கொலை குறித்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.