கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கெலவரப்பள்ளி அணை தனது முழு நீர்மட்ட அளவை எட்டியுள்ள நிலையில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீருடன் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது தனியார் தொழிற்சாலைகள் சில தேக்கிவைத்துள்ள ரசாயன கழிவுகளை ஆற்று நீருடன் வெளியேற்றியுள்ளன. இதனால் அணையிலிருந்து அதிகளவிலான நுரை கலந்த தண்ணீர் வெளியேறுகிறது.
இந்த நீரை குடிக்கும் கால்நடைகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமோ என விவசாயிகள் ஆற்றுநீரை பயன்படுத்தத் தயக்கம் காட்டுகின்றனர்.
இதையும் படிங்க: 'குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்குமா சென்னை?' - முக்கிய நீர்நிலைகளின் நீர் இருப்பு இதுதான்!