கிருஷ்ணகிரி அருகே உள்ள நடுசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். ஓசூரில் உள்ள தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இவர், கிருஷ்ணகிரி பூசாரிபட்டியைச் சேர்ந்த சீனிவாசன், சாமிநாதன் ஆகிய இருவரையும், அதே ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணிக்கு சேர்த்துள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. இதனால் இழப்பை சந்தித்ததாக கூறி சீனிவாசனும், சாமிநாதனும் வினோத்குமாரை அணுகி தங்களது இழப்பை ஈடு செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று வினோத் வீட்டுக்கு சென்ற சாமிநாதன், சீனிவாசன் அவர் வீட்டில் இருந்த பத்து சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விவசாயி தீக்குளிப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்ற அழுத்தம் கொடுத்தது யார்? - திமுக எம்பி கேள்வி