கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டிணம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியமுத்தூர், சாந்தி நகர் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு பணியாளர்கள் மூலம் மேற்கொண்டு வரும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. பிராபகர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பெரியமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சாந்தி நகர் பகதியில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுதிட்டத்தின் கீழ் வீடு கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார். அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கையை ஏற்று, கழிவுநீர் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பின்னர், வேளாண்மைத்துறையின் மூலம் 23 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல் ரகத்தை பார்வையிட்டு அது குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் அணைபகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்யும்போது அப்பள்ளி தலைமையாசிரியர் மூன்று கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிவறை கட்டடம் தேவைப்படுகிறது என்றும் பள்ளிக்கு ஒகேனக்கல் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூடுதல் வகுப்பறை கட்டவும், குடிநீர் வசதி செய்துதரவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ராமதாஸூக்கு கெடு விதித்த திமுக... மீறினால் 1 கோடி ரூபாய் இழப்பீடு!