கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்களின் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் அங்குள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்துவருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை தம்பதியரின் குழந்தை மாயமானது .
இன்று அந்த குழந்தை ஓசூர் -அத்திப்பள்ளி இடையே கர்நாடகா தமிழ்நாடு மாநில எல்லையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக்கொலை குறித்து அத்திப்பள்ளி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள். ஒன்றரை வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க:ஒரு வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு; பெற்றோரிடம் தீவிர விசாரணை