ETV Bharat / state

சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்! - x army man wife murder

கிருஷ்ணகிரி அருகே 45 வயது பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kuntharapalli murder
சந்தேகத்திற்கிடமான முறையில் கழுத்தறுக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட பெண்
author img

By

Published : Dec 11, 2020, 3:53 PM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், தற்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி(45) தனது மகனுடன் குந்தராப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் வசித்துவருகிறார்.

இன்று, வீட்டின் மேல் மாடியில் உள்ள மற்றொரு வீட்டில் நாகலட்சுமி சந்தேகத்திற்கிடமான முறையில், கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். நாகலட்சுமியின் மகன் இதுகுறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

குருபரப்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகலட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

கீழ் வீட்டில் தனது மகனுடன் இருந்த நாகலட்சுமி இரவு நேரத்தில் எதற்காக மேல் வீட்டிற்குச் சென்றார்? வேறு யாரும் அவரை அழைத்துச் சென்றனரா? கணவர் சென்னையில் பணியாற்றிவரும் நிலையில், நாகலட்சுமிக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தற்போது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.