மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று(ஆகஸ்ட் 7) திமுக சார்பில் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என ஏழை எளியோருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட்டது .
அதன் ஒருபகுதியாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன் 300க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருள்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் ஓசூர் எம்எல்ஏ சத்யா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார். மேலும் இதில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.