கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த களர்பதி கிராமத்தில் களர்பதி ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரி மீது அமைந்துள்ள பாலத்தில் மீது இன்று காலை களர்பதி கிராமவாசிகள் நடந்த சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து, பாலத்தின் அடியில் சென்று பார்த்தபோது ஏறத்தாழ 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், மத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: காவல்துறை அலட்சியத்தால் தப்பியோடிய கஞ்சா சப்ளையர் ரம்யா!