கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று இந்தக் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இன்று (ஜன. 01) 63ஆம் ஆண்டு விழாவாக ஆஞ்சநேயருக்கு அதிகாலை முதலே ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கடலைக்காய் வழிபாடு
இதனைத்தொடர்ந்து கடலைக்காய்க்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடலைக்காயை ஆஞ்சநேயர் பிரகாரத்தின் மீதும் ஆஞ்சநேயர் சாமியின் மீது எரிந்து வழிபாடு நடத்தினர்.
புத்தாண்டு பிறக்கும்போது ஆஞ்சநேயரின் மனம் குளிரும் வகையில் வேர்க்கடலைக்காயை அவர் மீது எரிந்து வழிபட்டால் நாடு நலம் பெறும், வேளாண்மை செழிக்கும் என்பது நம்பிக்கை. பாரம்பரியமாக நடத்தப்பட்ட இந்தத் திருவிழா தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் வேறு எந்தப் பகுதியிலும் இதுபோன்ற வழிபாடுகள் நடைபெறுவது இல்லை எனப் பக்தர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 2 ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு!