கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வழக்கறிஞர் ஸ்ரீராம் என்பவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவரது வீட்டில் ஏராளமான நெகிழிப் பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென மற்ற இடங்களிலும் பரவத் தொடங்கியது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிர்ஷ்டவசமாக அவரது வீட்டில் ஆட்கள் இல்லாததால் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் வீட்டிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் ஏரிந்து சாம்பலாகின.
காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு மூலம் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் படுகாயம்