ETV Bharat / state

சிலிண்டர் வெடித்த தீ விபத்தில் - பல லட்ச மதிப்பிலானசொத்துகள் சேதம்!

கிருஷ்ணகிரி: ஓசூரில் சிலிண்டர் வெடித்த தீ விபத்தில் எட்டு இருசக்கர வாகனம், ஒரு ஆட்டோ, ஒரு மினி லாரி, கோழிக்கடை உள்ளிட்ட சொத்துகள் தீயில் எரிந்து சேதமாகின.

FIRE ACCIDENT கிருஷ்ணகிரி தீ விபத்து ஓசூர் தீ விபத்து ஓசூரில் சிலிண்டர் வெடித்த தீ விபத்து அலசநத்தம் தீ விபத்து KRISHNAGIRI FIRE ACCIDENT HOSUR FIRE ACCIDENT ALASANATHAM FIRE ACCIDENT Cylinder Explosion in Hosur
HOSUR FIRE ACCIDENT
author img

By

Published : Mar 19, 2020, 1:26 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள அலசநத்தம் பகுதியில் லாரி ஒன்று சிலிண்டர் ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது, சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிருந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் அருகிலிருந்த கோழிக்கடை, எட்டு இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, ஒரு மினிலாரி உள்ளிட்ட சொத்துகள் முற்றிலும் எரிந்து சேதமாகின.

சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு கிளம்பும் புகைமண்டலம்

இதுதொடர்பாக ஓசூர் அட்கோ காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதையும் படிங்க:திடீரென எரிந்த தனியார் பேருந்து: நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த பயணிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.