ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் கைவினை பொருள்கள் கண்காட்சி - ஓசூரில் பூம்புகார் விற்பனை நிலையம்

கிருஷ்ணகிரி: ஓசூரில் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் கைவினை பொருள்கள் கண்காட்சி தொடங்கியுள்ளது.

krishnagiri
krishnagiri
author img

By

Published : Feb 17, 2020, 12:03 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிறைச்சாலை எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் கைவினை பொருள்கள் கண்காட்சி நேற்றுத் தொடங்கியது. வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் இக்கண்காட்சியை தொடங்கி வைத்தார். நேற்றிலிருந்து வரும் 23ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

அதில், பஞ்சலோக சிலைகள், சந்தன மர சிற்பங்கள், சந்தன கட்டைகள், மர சிற்பங்கள், தஞ்சாவூர் கலை ஓவியங்கள், பித்தளை கலை பொருட்கள், சில்க், வெல்வெட் ஓவியங்கள், நவரத்தின கற்களால் செய்யப்பட்ட நகை, நவரத்தின மாலைகள், வாரணாசி சில்க் துணிகள், புடவைகளும் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட வகையான பொருட்கள் இடம் பெற்றுள்ளன. குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் வரையிலான பொருட்கள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

கைவினை பொருட்கள் கண்காட்சி

இதையும் படிங்க: மதுரையில் நாய்கள் கண்காட்சியில் 30 வகையான நாய்கள் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.